web site hit counter Jayakanthan Sirukathaigal Thoguppu - 2 (Tamil) - Ebooks PDF Online
Hot Best Seller

Jayakanthan Sirukathaigal Thoguppu - 2 (Tamil)

Availability: Ready to download

Jayakanthan known for his revolutionary thoughts and his writing style.


Compare

Jayakanthan known for his revolutionary thoughts and his writing style.

30 review for Jayakanthan Sirukathaigal Thoguppu - 2 (Tamil)

  1. 4 out of 5

    Prem

    படித்த புத்தக வடிவம்: Amazon Kindle மின்புத்தகம் ஜெயகாந்தனின் 1958 முதல் 1971 வரை எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு. Kindle-ல் உள்ள மேற்கோள் செய்யும் வசதியில் 71 குறிப்புகள் எடுத்துள்ளேன். இன்னும் எடுக்காமல் விட்ட மேற்கோள்கள் இருக்கக் கூடும். இதிலிருந்தே இப்புத்தகத்தின் சிறப்பு புரிகிறது. ஒவ்வொரு கதையின் கருப்பொருளும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாகவே எனக்குப் படுகின்றது. அது அக்கினிப் பிரவேசமாக (1965) இருக்கட்டும், புது செருப்புக் கடிக்குமாக (1971) இருக்கட்டும், அக்ரஹாரத்த படித்த புத்தக வடிவம்: Amazon Kindle மின்புத்தகம் ஜெயகாந்தனின் 1958 முதல் 1971 வரை எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு. Kindle-ல் உள்ள மேற்கோள் செய்யும் வசதியில் 71 குறிப்புகள் எடுத்துள்ளேன். இன்னும் எடுக்காமல் விட்ட மேற்கோள்கள் இருக்கக் கூடும். இதிலிருந்தே இப்புத்தகத்தின் சிறப்பு புரிகிறது. ஒவ்வொரு கதையின் கருப்பொருளும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாகவே எனக்குப் படுகின்றது. அது அக்கினிப் பிரவேசமாக (1965) இருக்கட்டும், புது செருப்புக் கடிக்குமாக (1971) இருக்கட்டும், அக்ரஹாரத்துப் பூனையாக (1969) இருக்கட்டும் புதிய வார்ப்புகளாக (1965) இருக்கட்டும் , நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையும், ஜெயகாந்தன் எப்படி காலத்தைக் கடந்தவராக இருக்கிறார் என்பதையுமே காட்டுகின்றன. நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையை என்னால் பிதாமகன் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை, அந்தப் பாடலுடன் சேர்த்து. சில கதை மாந்தர்கள் நேரடியாக வாசகர்களுடன் பேசுகிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள், முடிவை நம்மிடமே விட்டு விடுகிறார்கள். எத்தனைக் கருத்தார்ந்த கதையிலும் ஒரு மெல்லிய பகடி, நகைச்சுவையைப் புகுத்தி புன்முறுவலை ஏற்படுத்தத் தவறுவதில்லை ஜேகே. எனக்கு மிகவும் பிடித்த கதைகள்: * - பிணக்கு * - நந்தவனத்தில் ஓர் ஆண்டி * - நீ இன்னா ஸார் சொல்றே? * - சுயதரிசனம் * - புதிய வார்ப்புகள் * - அக்கினிப் பிரவேசம் * - புது செருப்புக் கடிக்கும் சில குறிப்புகள்: * - வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது. "ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது! * - டாக்டர் பதில் கூறாமல் தலையைக் குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார். * - நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா? * - நான் பேசறதே இல்லே... பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது... ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்... சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான். * - ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன. * - அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை. * - 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'... * - கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது. * - இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு. * - இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை... * - 'மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?'ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, 'மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?'ன்னார்... * - இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே! * - கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே - எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்? * - சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே? * - வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது. * - அவன் காலை உயர்த்தியபோது 'சளக்' என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன. * - சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது... * - சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்"னு

  2. 4 out of 5

    Prabhu R.

    Great writing, takes you to the 1960-1970s era and the lifestyle. Some of the stories are mocking and even condemning the practices of the society. These stories prove why Jayakanthan is a highly acclaimed author.

  3. 4 out of 5

    பூபதி கோவை

    Jeyakanthan -An Immortal Man Fantastic stories. All are soulful ones. He still lives in our hearts. Each character in his stories has its own values.. Great author...

  4. 5 out of 5

    Karthick

    Was Not able to keep it down. Each story was unique and interesting. A lot of questions to the readers. A method I believe that is so refreshing.

  5. 4 out of 5

    Satheesh Kumar

    படித்ததில் பிடித்தது: 1. நந்தவனத்தில் ஓர் ஆண்டி 2. அக்கினிப் பிரவேசம் 3. புது செருப்பு கடிக்கும் 4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

  6. 5 out of 5

    Hanushia

  7. 4 out of 5

    sandesh

  8. 4 out of 5

    Vasanthan A

  9. 4 out of 5

    நிவி

  10. 5 out of 5

    Bharathi Krishnamurthy

  11. 4 out of 5

    Murlimb

  12. 4 out of 5

    Padmashree S

  13. 5 out of 5

    Kannan

  14. 4 out of 5

    Senthil

  15. 5 out of 5

    Ambalavanan Rama

  16. 4 out of 5

    Priya

  17. 4 out of 5

    Mukesh Selvaraj

  18. 5 out of 5

    PANNEERSELVAM SRINIVASAN

  19. 4 out of 5

    Maheswari Rajan

  20. 4 out of 5

    jâĉk spàrrow

  21. 5 out of 5

    Padmanabhan Vijayan

  22. 4 out of 5

    Prabu Devarajan

  23. 5 out of 5

    Manonanthini Shanmuganathan

  24. 4 out of 5

    Iyer fam

  25. 5 out of 5

    Venkat

  26. 4 out of 5

    Hemkumar

  27. 4 out of 5

    M.Akshaya

  28. 5 out of 5

    padmavathi

  29. 5 out of 5

    shakthi

  30. 5 out of 5

    N.p.manohar

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...