web site hit counter Dravida Iyakka Varalaru - Part 1 (Tamil) - Ebooks PDF Online
Hot Best Seller

Dravida Iyakka Varalaru - Part 1 (Tamil)

Availability: Ready to download

This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).


Compare

This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).

55 review for Dravida Iyakka Varalaru - Part 1 (Tamil)

  1. 5 out of 5

    Satheesh Kumar

    திராவிட இயக்கத்தின வரலாற்றைக் comprehensiவாகக் கூறும் இரு நூல்களின் முதல் பாகம். நீதிக் கட்சியாகத் தோன்றி, பெரியாரின் கீழ் திராவிட கழகமாக உருமாறி, பின் அண்ணாவால் ஆட்சிப் படியில் ஏறும் அளவுக்கும் கொண்டு வரப்பட்டு வந்த வரலாற்றை மிக விலாவாரியாகச் சொல்லும் நூல் தென்னிந்தியாவின் பல தலைவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது இந்தப் புத்தகத்தின் மூலம். இராஜாஜி, பெரியார், அண்ணா, பாரதிதாசன், என்.எஸ்.கே, சம்பத், கருணாநிதி, எம்.ஜி‌.ஆர்.... இப்படிப் பல தலைவர்களின் அரசியல் செயல்பாடுகள் விலாவாரியாகக் கூற திராவிட இயக்கத்தின வரலாற்றைக் comprehensiவாகக் கூறும் இரு நூல்களின் முதல் பாகம். நீதிக் கட்சியாகத் தோன்றி, பெரியாரின் கீழ் திராவிட கழகமாக உருமாறி, பின் அண்ணாவால் ஆட்சிப் படியில் ஏறும் அளவுக்கும் கொண்டு வரப்பட்டு வந்த வரலாற்றை மிக விலாவாரியாகச் சொல்லும் நூல் தென்னிந்தியாவின் பல தலைவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது இந்தப் புத்தகத்தின் மூலம். இராஜாஜி, பெரியார், அண்ணா, பாரதிதாசன், என்.எஸ்.கே, சம்பத், கருணாநிதி, எம்.ஜி‌.ஆர்.... இப்படிப் பல தலைவர்களின் அரசியல் செயல்பாடுகள் விலாவாரியாகக் கூறப்பட்டுள்ளன. இயக்கத்தை வளர்க்கப் பாடுபடுவதும், மன வருத்தங்களால் பிரிவதுமான இவர்களின் செயல்கள் மிக சுவாரஸ்யம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இருவர் - பெரியார் மற்றும் அண்ணா! நீதிக் கட்சியின் ஆரம்பக் காலங்களில் இருந்தே அதில் ஈடுபட்டு, அந்தக் கட்சி திராவிடக் கழகமாக மாறியதற்கு முக்கிய காரணதாரியாக இருந்து, தி.மு.க பிரிந்து சென்ற பின்னும் கழகத்தை சீராக நடத்தி வந்து, திராவிட இயக்கத்தின் பிதாமகர் போலவே செயல்பட்டிருக்கார் ஈ.வெ.ரா. பெரியார் பீஷ்மர் என்றால் அவரது தளபதி அண்ணா தான் திராவிட இயக்கத்தின் துரோணர். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டவுடன், தி.மு.கவாகப் பிரிந்து, கொஞ்சம் கொஞ்சம் மக்களின் ஆதரவைத் திரட்டி, பல வருடங்கள் போராட்டதுக்குப் பின் காங்கிரஸை வீழ்த்தி தி.மு.கவை ஆட்சியைப் பிடிக்கச் செய்தது ஒரு மகத்தான சாதனை. பெரியார், அண்ணா இருவருக்குமான உறவு மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களை எதிர்ப்பதில் கொஞ்சம் அதிகமாதத் தான் போனரோ திராவிட கழகத்தினர் என்ற சந்தேகம் புத்தகம் முழுவதும் என்னை உறுத்திக் கொண்டே இருந்த்தது. ஒரு வேளை அப்போது இருந்த சமுதாய நிலைமையில் இது ஒரு பெரிய விஷயமாக இருந்திருக்காதோ? திராவிட இயக்கத்தினர் பிராமணர்களை இந்த அளவுக்கு வெறுக்கும் அளவுக்கா மற்ற சாதிகள் அப்போது ஒடுக்கப்பட்டிருந்தன? . இது தவிர, பல இடங்களில், திராவிட கட்சிகளின் நிலைப்பாடு திகைக்க வைத்தன. பார்ப்பனர்களை(காங்கிசை) எதிர்க்க வெள்ளையர்களை அடிக்கடி ஆதரித்தது ("சைமனே வருக" என்று கோஷம் எழுப்பியது போல்), இந்திய சுதந்திரத்தை எதிர்த்தது, பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தது... இது போன்ற நிலைப்பாடுகள் எடுத்ததின் காரணம், திராவிட கொள்கைகளின் extreme உருவத்தைக் கடைபிடிக்கும் உறுதியா, அல்லது தற்காலிக அரசியல் லாபங்களா என்பது தெரியவில்லை! , சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை ஓரு காங்கிரஸ் அல்லாத கண்ணோட்டதில் வாசிப்பது மிக சுவாரஸ்யம்! அதுவும் அடிப்படைக் கொள்கையில் காங்கிரஸிடம் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கட்சியின் கண்ணோட்டம் எனும் போது, காங்கிரஸைப் பற்றி இதற்கு முன் தெரியாத(exaggerate பண்ணியிருக்கும் சிலவற்றைத் தவிர்த்து) பல விஷயங்கள் புலப்படுகின்றன. உதாரணத்துக்கு, ஒத்துழையாமை இயக்கத்தில் காங்கிரஸ் ஈடுபட்டிருந்த போது தேர்தல்கள் அனைத்தையும் புறக்கணித்தாக நினைத்துக் கொண்டிருந்தேன் நான்(அப்படித் தான் நமது வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன). ஆனால் தேர்தல்களில் ஸ்வராஜ் கட்சி காங்கிரஸின் பிரதிநிதிக் கட்சியாகப் போட்டியிட்டது இதற்கு முன் அறிந்திராதது. இது மாதிரி பல விஷயங்கள்.. புத்தகத்தில் பல இடங்களில் நிகழ்வுகளை விவரிக்கும் போது ஆசிரியர் நடுநிலை வகிக்காமல் இருப்பது புத்தகத்தில் ஒரு பெரிய குறை. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எந்த திராவிட இயக்கத்தின் போராட்டங்களை விவரிக்கும் போதும், திராவிட இயக்கத்தின் ஒருவர் போலவே சம்பவங்களை விவரிக்கிறார் முத்துகுமார். ஆசிரியரின் தனிப்பட்ட அரசியல் சார்பு என்னவாக இருந்தாலும், இது வரலாற்று புத்தகம் என்பதால் இன்னும் நடுநிலைமையோடு எழுதியிருக்கலாம். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழகத்தின் அரசியல் வரலாற்றை, திராவிட இயக்க பார்வையில் அறிந்து கொள்ள ஒரு அருமையான புத்தகம்!

  2. 5 out of 5

    Umesh Kesavan

    A highly readable history of the Dravidian movement. The book clearly explains what led to the creation of DMK.

  3. 5 out of 5

    Gowtham

    R muthukumar எழுதிய "திராவிட இயக்க வரலாறு" முதல் பாகம். . ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள வரலாறு பிரம்மிக்க செய்கிறது. எத்தணை போராட்டம் எத்தணை மாநாடு எத்தணை உயிரிழப்பு எத்தனை சூழ்ச்சி எத்தணை துரோகம் எத்தணை தியாகம் இவை எல்லாம் கடந்து இன்றும் இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருபதற்கு அதன் தொண்டர்கள் தான் காரணம். ஒரு இனத்தின் கல்வி, பொருளாதாரம், சுயமரியாதை பெண் விடுதலை என அவர்களின் தொலைநோக்கு பார்வை தான் இப்போது நாம் இருக்கும் இந்த நிலைமைக்கு காரணம். இதற்கு பின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது, இதன் R muthukumar எழுதிய "திராவிட இயக்க வரலாறு" முதல் பாகம். . ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு பின்னால் உள்ள வரலாறு பிரம்மிக்க செய்கிறது. எத்தணை போராட்டம் எத்தணை மாநாடு எத்தணை உயிரிழப்பு எத்தனை சூழ்ச்சி எத்தணை துரோகம் எத்தணை தியாகம் இவை எல்லாம் கடந்து இன்றும் இந்த இயக்கம் உயிர்ப்புடன் இருபதற்கு அதன் தொண்டர்கள் தான் காரணம். ஒரு இனத்தின் கல்வி, பொருளாதாரம், சுயமரியாதை பெண் விடுதலை என அவர்களின் தொலைநோக்கு பார்வை தான் இப்போது நாம் இருக்கும் இந்த நிலைமைக்கு காரணம். இதற்கு பின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது, இதன் வேர் 120 வருட பழமையானது கிளையை அசைக்கலாம். ஆனால் வேரை? 7 மாசத்துல ஆட்சிய பிடிக்க நினைக்க எப்படி சிலரால் முடிகிறது. முதல் பகுதி அய்யோத்தியதாசரில் தொடங்கி பெரியார், அண்ணா என நீள்கிறது. இரண்டாம் பாகத்தை நோக்கி. இந்த இயக்கம் திராவிட மக்களின் இழிவுகள் ஒழித்து சுயமரியாதையோடு வாழ செய்த இயக்கம். என்றும் நன்றியுடன். ❤️🖤

  4. 5 out of 5

    Karthik Thangavel

    If you want to know about the Dravidian moment and the rise of a party against the mighty Congress after independence, then this book is for you. It gives a brief introduction to many of the events that led to the formation and rise of Dravidian parties in the south India. Worth reading to anyone interested in history.

  5. 4 out of 5

    Manikandan

    How to read this book in goodreads

  6. 5 out of 5

    Gowri Shankar

    Little biased in the reasons and explanations... but the facts are not twisted..

  7. 5 out of 5

    Biju Ganesh Thirunavukkarasu

    Readable Tamilnadu Political Chronicle, but can't say the author's work is unbiased. Readable Tamilnadu Political Chronicle, but can't say the author's work is unbiased.

  8. 5 out of 5

    Shyam Shankar

    ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) உருவெடுத்த காரணமும், அதிலிருந்து திராவிட இயக்கம் பிறப்பதற்கான சூழலையும் சீரிய நடையில் அழகாய் விளக்கியிருக்கும் முத்துக்குமார் பாராட்டுதலுக்கு உரியவர். பெரியாரை பற்றியே வெகுவாக அறிந்த என்னைப் போன்றோருக்கு மாதவன் நாயர், தியாகராய செட்டியார், பனகல் அரசர் ராமராய நிங்கார் போன்றோரின் சமூக நீதிப் புரட்சிகளைப் பற்றி அறிவதற்கு இந்நூல் ஒரு நல்ல முன்னுரையாகத் திகழ்வது மகிழ்ச்சி. அப்படியே, வகுப்புவாரி உரிமையை (கம்யூனல் ஜி.ஓ) பாமரர் பெற ஜஸ்டிஸ் கட்சி ஆற்றிய மாபெரும் தொண்டை தெளிவாக ஜஸ்டிஸ் கட்சி (நீதிக் கட்சி) உருவெடுத்த காரணமும், அதிலிருந்து திராவிட இயக்கம் பிறப்பதற்கான சூழலையும் சீரிய நடையில் அழகாய் விளக்கியிருக்கும் முத்துக்குமார் பாராட்டுதலுக்கு உரியவர். பெரியாரை பற்றியே வெகுவாக அறிந்த என்னைப் போன்றோருக்கு மாதவன் நாயர், தியாகராய செட்டியார், பனகல் அரசர் ராமராய நிங்கார் போன்றோரின் சமூக நீதிப் புரட்சிகளைப் பற்றி அறிவதற்கு இந்நூல் ஒரு நல்ல முன்னுரையாகத் திகழ்வது மகிழ்ச்சி. அப்படியே, வகுப்புவாரி உரிமையை (கம்யூனல் ஜி.ஓ) பாமரர் பெற ஜஸ்டிஸ் கட்சி ஆற்றிய மாபெரும் தொண்டை தெளிவாக விளக்கும் அரசியல் சான்றாகவும் இந்நூல் விளங்குவது இதன் தனிச் சிறப்பு. தந்தை பெரியாரால் திராவிடம் மலர்ந்த விதமும், அவரையே பின்னாளில் எதிர்க்க நேர்ந்து அண்ணாவால் உதயமாகிய திராவிட முன்னேற்ற கழகத்தையும் பற்றி படிக்க படிக்க வியப்பும் ஆவலும் புத்தகத்தின் கடைசி பக்கத்தின் வரை தொடர்வது வியப்பான உண்மை. உண்மைக்கும் சுவாரசியத்திற்கும் இடையிலான இடைவெளியை தனது நேர்த்தியான நடையின் மூலம், உண்மை திரியாமலும், பொருள் சிதையாமலும், வேகம் குறையாமலும் தந்து வியப்பில் ஆழ்த்துகிறார் திருவாளர் முத்துக்குமார். இவையாவும் இப்புத்தகத்தின் அரண்களாய் விளங்கினாலும், பல இடங்களில் அச்சுப் பிழை காரணமாகவோ, அல்ல பதிப்பாளர்களின் கவனக் குறைவினாலோ, முக்கியமாக கவனிக்கப் படவேண்டியனவும், குறிப்பெடுக்க இன்றியமையாதவையுமான, நிகழ்வுகளின் தேதிகள் பெரும்பாலானவை ஆண்டுகள் முன்னும் பின்னுமாக அடுத்தடுத்த அத்தியாயங்களில் மட்டுமன்றி, அடுத்தடுத்த பத்திகளிலுமே இருப்பது வெகுவாக இந்த முக்கியப் படைப்பின் சாராம்சத்தை கெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மற்றபடி எவ்வளவு சிறிய பதிவாக இருப்பினும், திராவிட இயக்கத்தின் மலர்ச்சியை ஒரு குட்டிக் கதை போல அறிவதற்காகவாவது இந்நூல் பயன்படும் என்பதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. இதனை (திராவிட இயக்க வரலாற்றை) எந்த கட்சியும் சாராத ஒரு பொது மனிதாராக இருந்து, இப்புத்தகத்தை வரைந்து, அதனால் இதற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பொதுப்பார்வையை கொண்டு வந்ததற்கே திருவாளர் முத்துக்குமார் பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் உரியவர் ஆகிறார். தமிழ்நாட்டின் அரசியலை தெரிந்துகொள்ள ஒரு தெளிந்த (தேதி முரண்களை திருத்தினதாகக் கொண்டால்) சுருக்கமான சரித்திரப் பதிவாக இந்நூல் அறியப்படும். இரண்டாம் பாகத்தை சீக்கிரமே தொடர முயற்சிக்கிறேன்...

  9. 4 out of 5

    Senthil Kumar Thiru

    Simple narration, deep dived into the details . Though would appear to be a biased against Congress but it is unavoidable as Dravidian movement ensured complete decimation of Congress in Tamilnadu because of it's taken-for-granted approach on Tamils and their sentiments. Even today Tamilnadu congress fail to reflect Tamil people sentiments and stand marginalized... Simple narration, deep dived into the details . Though would appear to be a biased against Congress but it is unavoidable as Dravidian movement ensured complete decimation of Congress in Tamilnadu because of it's taken-for-granted approach on Tamils and their sentiments. Even today Tamilnadu congress fail to reflect Tamil people sentiments and stand marginalized...

  10. 4 out of 5

    Karthikeyan Kaliappan

    ஓர் கருத்தியலின் அதிகராம் நோக்கிய பயணம் நீதிகட்சி தொடங்கி அண்ணா ஆரசு வரையிலான தொகுப்பு. முடிந்தவரை அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய முயன்றுள்ளார்.ஒரு சிறு பொறியாக இருந்த கருத்து எப்படி அரசியல் உருவாக்கம் பெற்று பல்வேறு சவால்களை சந்தித்தது,அதிகாரத்தை கைபற்றியது(நீதி கட்சி). சிறு முரன்கள் எவ்வாறு ஒர் இயக்கத்தை வலுவிலக்க செய்யும்,கருத்தில் உருதியும்,பொறுமையும் களப்பணியும், அரசியல் சாதுர்யமும் பெற்ற தலைவர் முன்னெடுத்து தம்பியர் படை வென்றெடுத்த வெற்றி பற்றிய தொகுப்பு. பல்வேறு சூழ்நிலையில் தலைவர்களின ஓர் கருத்தியலின் அதிகராம் நோக்கிய பயணம் நீதிகட்சி தொடங்கி அண்ணா ஆரசு வரையிலான தொகுப்பு. முடிந்தவரை அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய முயன்றுள்ளார்.ஒரு சிறு பொறியாக இருந்த கருத்து எப்படி அரசியல் உருவாக்கம் பெற்று பல்வேறு சவால்களை சந்தித்தது,அதிகாரத்தை கைபற்றியது(நீதி கட்சி). சிறு முரன்கள் எவ்வாறு ஒர் இயக்கத்தை வலுவிலக்க செய்யும்,கருத்தில் உருதியும்,பொறுமையும் களப்பணியும், அரசியல் சாதுர்யமும் பெற்ற தலைவர் முன்னெடுத்து தம்பியர் படை வென்றெடுத்த வெற்றி பற்றிய தொகுப்பு. பல்வேறு சூழ்நிலையில் தலைவர்களின் நிலைபாடுகள் அவர்களின் தற்போதய பிம்பதிற்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. வரலாறு கட்டமைகபடுகிறது,தலைவர்களும் தவறாக செயல்பட்டுள்ளனர். தற்காலத்தின் முதல்வர் கணவுகளுக்கும் அக்காலத்தின் உழைப்புக்குமான வித்தியாசம் முகத்திலடிக்கிறது.

  11. 4 out of 5

    Gowtham

    ujggbjgbuj

  12. 5 out of 5

    Kathiresan

    தமிழக அரசியலின் 20ம் நூற்றாண்டு வரலாற்றை திராவிட இயக்க வரலாற்றுடன் ஆசிரியர் விளக்குகிறார். அறியாத பல தகவல்கள் பகிரப்படுதல் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகிறது

  13. 4 out of 5

    Senthil

  14. 4 out of 5

    Presanna

  15. 4 out of 5

    R KARTHIKEYAN

  16. 4 out of 5

    AMMAN KUMAR S

  17. 4 out of 5

    Viji Balaji

  18. 5 out of 5

    Arun Karthick

  19. 5 out of 5

    Satheesh

  20. 4 out of 5

    Steephanraj

  21. 5 out of 5

    Kathir Rath

  22. 4 out of 5

    Sudhakar

  23. 4 out of 5

    Shanmugam Shan

  24. 5 out of 5

    Abdul Basidh

  25. 5 out of 5

    Subash

  26. 5 out of 5

    Saravanan Musuwathi

  27. 4 out of 5

    Buddu R

  28. 5 out of 5

    Sathya

  29. 4 out of 5

    Reshma

  30. 4 out of 5

    Arun simhan

  31. 4 out of 5

    Bala

  32. 5 out of 5

    Arumugam

  33. 4 out of 5

    Bharathy

  34. 5 out of 5

    Sundar96

  35. 4 out of 5

    Senthilkumar Jp

  36. 5 out of 5

    Muthamil Selvan

  37. 5 out of 5

    Aswin Ravi

  38. 5 out of 5

    Aswath Narayanan

  39. 4 out of 5

    Krishna Sreethar

  40. 5 out of 5

    Ela .

  41. 5 out of 5

    Syed Ibrahim

  42. 4 out of 5

    Selvan

  43. 5 out of 5

    Vignesh4thillaigmail.com

  44. 5 out of 5

    Saravanan Ramasamy

  45. 5 out of 5

    S.madhavan

  46. 4 out of 5

    Harish

  47. 5 out of 5

    Muthukumar

  48. 4 out of 5

    Jameen

  49. 4 out of 5

    Thirunavukarasu Al

  50. 5 out of 5

    Karthikeyan

  51. 4 out of 5

    Kathir

  52. 4 out of 5

    a20

  53. 4 out of 5

    Nelsonphysio

  54. 4 out of 5

    Gowtham Ramnath

  55. 5 out of 5

    Suresh

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...
We use cookies to give you the best online experience. By using our website you agree to our use of cookies in accordance with our cookie policy.